தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வருபவர் தான் ஜானி மாஸ்டர் (ஷேக் ஜானி பாஷா). சமீபத்தில் இவர் மீது ஆந்திர மாநில திரைப்பட நடனக் கலைஞரான இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இதை விசாரித்த போலீஸ் ஜானி மீது பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கினார்.
Also Read: விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்.. அடடே யார் தெரியுமா?
இந்நிலையில் ஜானி மாஸ்டர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது வரை ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்
விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்