இந்த புத்தாண்டில் 2025 ஜனவரியில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது என்பது குறித்து சிறப்பு தொகுப்பு வெளியாகியுள்ளது.
இன்று நாம் 2025 ம் ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம். ஒவ்வொரு மனிதரும் புதிய ஆண்டு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து தான் எதிர்பார்ப்புகள் இருக்கும்.
அதுமட்டுமின்றி அவர்களுடைய ராசி எப்படி இருக்க போகிறது என்பது குறித்து ஜோதிட நிலையங்களுக்கு சென்று கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதன்படி, ஜனவரி 4 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்குள் நுழைவார். அதன் பின் ஜனவரி 14ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கும், ஜனவரி 21ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கும் செல்ல இருக்கிறார். இதையடுத்து, ஜனவரி 24ஆம் தேதி புதன் மகர ராசியில் நுழைய இருக்கிறார்.
2025 ஜனவரியில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது.., உங்க ராசி இருக்கான்னு பார்த்துக்கோங்க!!
மகரம்:
2025 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் மகர ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கல்யாண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடம் அவர்களுக்கு பூத்து குலுங்கும் ஆண்டாக அமையும்.
மேஷம்:
2025 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். தொழிலதிபர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வணிகர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். ஆக மொத்தத்தில் இந்த வருடம் அவர்களுக்கு லாபகரமாக அமையும்.
துலாம்:
ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது. வசதிகள் அதிகரிக்கும். பணியில் ப்ரோமோஷன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய லாபத்தைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – தேதி குறித்த அறநிலைத்துறை!
மீனம்:
ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் தொட்டதெல்லாம் தொடங்கும் வருடமாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அதிக லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் அதிகமாக கிடைக்கும். நீண்ட நாள் முடியாமல் இருக்கும் காரியங்கள் முடியக்கூடும்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!
கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?