ஜப்பானில் கடந்த 1ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வீதியிலே பீதியில் திரிந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதே போல் கடந்த 6ம் தேதி துருக்கி பகுதியில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக எக்கசக்க உயிர்கள் பலியாகினர். ஏகப்பட்ட பேர் படு காயங்கள் அடைந்தனர். இதனால் மக்கள் கடும் பீதியில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ஜப்பானில் மீண்டும் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜப்பானில் முக்கிய தீவாக விளங்கும் ஹொக்கைடோ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி குலுங்கி சின்னாபின்னமானது. இதனால் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். மேலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.