டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் வெறும் 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழந்து 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று ஆரம்பித்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தனர். தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனும், பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா திடீரென மைதானத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா?
அதாவது, பும்ராவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தான் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இனிமேல் இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. எனவே இனி இந்திய அணியை பும்ராவுக்கு பதிலாக விராட் கோலி தான் வழி நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு.., விக்கிரவாண்டியில் பரபரப்பு!!
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!
ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!