கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் வழக்கில் சிக்கிய ஆதாரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த 4ம் தேதி அவரது வீட்டுத் தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. மேலும் இறந்தது ஜெயக்குமாரா? என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய நிலையில், DNA பரிசோதனைக்காக அவரது எலும்புகள் மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் போலீஸ் சோதனையின் போது அவர் டார்ச் லைட் வாங்க கடைக்கு சென்ற பிறகு தான் காணாமல் போனார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், அப்போது எப்படி கடைசியாக வாங்கிய டார்ச் லைட் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் சோதனை நடத்திய போது கைப்பற்றப்பட்டுள்ளது என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
கொச்சியில் 9 பேரை கடித்த தெருநாய் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – தேடுதல் வேட்டையில் மாநகராட்சி ஊழியர்கள்!!
மேலும் இந்த வழக்கு தொடர்பாக எவ்வித ஆதாரங்களும் காவல்துறைக்கு கிடைக்காத நிலையில் இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகங்களில் ஆய்வு செய்த சிபிசிஐடி எஸ் பி முத்தரசி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.