
ஜெ.ஆர்.34: டாடா பட இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஜெ.ஆர்.34: டாடா இயக்குனருடன் கூட்டணி வைத்த ஜெயம் ரவி
இப்படி இருக்கையில் தற்போது அவர் நடிக்க போகும் புதிய படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கவின் வைத்து டாடா என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் தான் இயக்குனர் கணேஷ் கே பாபு.
இவருடைய அடுத்த படத்தில் தான் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். ஜெயம் ரவியின் 34-வது (ஜெ.ஆர் 34) படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இரண்டாவது முறையாக இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக இருக்கிறார்.
நடிகை சோனாவை மிரட்டிய இருவர் கைது – மதுரவாயல் போலீஸ் அதிரடி!!
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாரபூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.