தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகை ஜெயப்பிரதா. கிட்டத்தட்ட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். அந்த வகையில் 2004 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். இதையடுத்து கடந்த 2019 -ம் ஆண்டு பாஜகவில் அதிரடியாக இணைந்தார். அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். எனவே இது குறித்து நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கு ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எனவே நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜெயப்பிரதாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனை கருத்தில் கொண்டு அவரை தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நடிகை ஜெயப்பிரதாவை உடனடியாக கைது செய்து அடுத்த மார்ச் 6 -ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.