மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் மதுரை அருகே ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக பிரித்து வரும் ஜூன் 3ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு மக்களின் வாக்குகளை சேகரிக்க அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருத்தி பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த நகைகள் மதுரை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.