சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜி வழக்கு :
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தபட்டார்.
அந்த வகையில் கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி,
அத்துடன் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்ட பின் கையெழுத்திட்டு கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டார்.
47 வது முறையாக காவல் நீட்டிப்பு :
இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் தற்போது 47வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் தரப்பில் புதிதாக மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுவில் வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடு உள்ளதாகவும், மேலும் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால் ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18 ஆம் தேதி வழக்கு விசாரணை :
இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில்,
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் – முழு தகவல் இதோ !
வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, தாக்கல் செய்யப்பட்ட இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.