ஜூன் 2024 திருவிழாக்கள் ! தமிழ்நாட்டில் இந்த வார விசேஷங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் !ஜூன் 2024 திருவிழாக்கள் ! தமிழ்நாட்டில் இந்த வார விசேஷங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் !

ஜூன் 2024 திருவிழாக்கள். ஸ்ரீ குரோதி வருடமான இந்த ஆண்டு, வைகாசி மாதம் 22 முதல் 28 வரை உள்ள விஷேஷ நாட்கள், திதி, மற்ற சிறப்பு நாட்கள், சிறப்பு தரிசனங்கள், சாமி ஊர்வலம், தனிப்பட்ட கோவில்களின் சிறப்பு நாள் இது போன்ற அனைத்தும் குறித்து கீழே காணலாம்.

நாள் – கீழ்நோக்கு நாள்

திதி – திரயோதசி

சுவாமிமலை பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளும் தினம்.

அகோபிலமடம் திருமத் 39-வது பட்டம் அழகியசிங்கர் திருநட் சத்திர வைபவம்.

திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் 2024 நடைபெறும் நாள்.

பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி June 2024.

நாள் – கீழ்நோக்கு நாள்

திதி – சதுர்த்தசி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் தர சிம்மருக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் உலா வருவார்.

திருத்தணி முருகப்பொருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்படும் நாள்.

நாள் – மேல்நோக்கு நாள்

திதி – வைகாசி அமாவாசை ஜூன் 2024

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்படும் நாள்.

சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைர வேல் உடன் தரிசனம் தருவார்.

2024 சர்வ அமாவாசை தினம்.

ஆன்மிக செய்திகள் ஜூன் 2024! முருகனின் வித்யாசமான கோலங்கள் என்ன என்று அறியலாம்!

நாள் – சமநோக்கு நாள்

திதி – பிரதமை

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்படும் நாள்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம் தரும் நாள்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்படும் நாள்.

திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை அருளும் நாள்.

சந்திர தரிசனம்.

நாள் – மேல்நோக்கு நாள்

திதி – துவிதியை

திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள் மற்றும் மன்னார் குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை நாள் 2024.

திருநள்ளாறு சனி பகவானுக்கு அபிஷேகம் நடைபெறும் நாள்.

நாள் – சமநோக்கு நாள்.

திதி – திரிதியை

கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமானுக்கு திருமஞ்சன சேவை நாள் 2024.

பத்ராசலம் ராமபிரான் புறப்படும் நாள்.

திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம் நடைபெறும் நாள்.

சுபமுகூர்த்த நாள்.

Join Whatsapp Group

நாள் – மேல்நோக்கு நாள்

திதி – சதுர்த்தி

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம் தரும் நாள்.

திருமயம் சத்திய மூர்த்தி புறப்படும் நாள்.

தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்படும் நாள்.

சதூர்த்தி விரத நாள் மற்றும்,

2024 சுபமுகூர்த்த நாள்.

இதுவே இந்த வார சிறப்பு தினங்கள் மற்றும் விசேஷங்கள்.

ஆன்மிக தகவல் ஜூலை 2024

கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துவது எப்படி தோன்றியது

ருத்ராட்சம் மாலை பயன்கள் ! ஏக முகம் முதல் 14ம் முகம் வரை தரும் நன்மைகள்

கலியுகத்தை கணித்த வேதவியாசர் ! 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது அப்படியே நடக்கும் அதிசயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *