எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி - இளம் வயதிலேயே அசத்தல்!எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி - இளம் வயதிலேயே அசத்தல்!

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி: உலகத்தில் மிகப்பெரிய மலைகளில் ஒன்றாக இருந்து வரும் எவரெஸ்ட் மலையின் உச்சி மீது ஏறி தனது நாட்டின் கொடியை நிலைநாட்ட வேண்டும் என்று பெரும்பாலான சாகச வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் சில பேர் வெற்றியும் அடைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது 12ம் வகுப்பு மாணவி மலையேறி சாதனை புரிந்துள்ளார். அதாவது மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் மாணவி காம்யா கார்த்திகேயன் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருடைய தந்தை கார்த்திகேயன் கடற்படை அதிகாரியாக இருந்து வருகிறார்.

இவருக்கு எவரெஸ்ட் மலையேறி சாதனை புரிய வேண்டும் என்று நீண்ட நாள் கனவாகவே இருந்துள்ளது. இந்நிலையில் அந்த கனவை நினைவாக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 3ம் தேதி தனது மகளுடன் சேர்ந்து எவரெஸ்ட் மலையேறி உள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் தனது பயணத்தை தொடங்கி கடைசியாக மே 20ம் தேதி  8849 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளைய பெண் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே.. ஷாருக்கானுக்கு என்ன தான் ஆச்சு? பாலிவுட்டில் பரபரப்பு!!

இதை வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவர் இதற்கு முன் ஏழு கண்டங்களிலும் இருக்கும் மிக உயரமான சிகரத்தை ஏறும் சவாலில் காம்யா இதுவரை 6 சிகரங்களை கண்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவா மலை மற்றும் கடந்த டிசம்பர் மாதம் அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிஃப் மலையில் ஏறி ‘7 Summits Challenge’-ஐ நிறைவு  செய்து சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *