சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நாளை இடம்பெறுகிறார். அதன்படி, மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை, அதாவது, இரண்டரை வருடத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருள் புரிவார். சனிபகவான் கடக ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். எனவே, கடக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் அள்ளித் தருவார். அஷ்டமத்து சனி விலக போகிறது.
இதனால், இனிமேல் உங்களுக்கு கஷ்டம் எல்லாம் விலகி நன்மைகள் வந்து சேரும். சனி பகவான் 9-ம் வீட்டில் ஆட்சி புரிய இருப்பதால், எல்லா செயல்களிலும் முன்னிலை வகிப்பீர்கள்.
கணவன் – மனைவிக்குள் இதுவரை இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சொந்த வீடு வாங்கும் நீண்ட கால ஆசை நிறைவேறும்.
திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகக்கூடும்.
பண விஷயங்களில் ஜாமீன், உத்திரவாதம் எதுவும் தர வேண்டாம். அது வீண் வினையை உண்டாக்கும். உத்தியோகத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வீர்கள்.
பெண்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கிடைக்கும். மேலும் சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், எதிர்பாராத பணவரவு கிடைக்கும். அதுமட்டுமின்றி புது சொத்து வாங்கும் சூழல் ஏற்படும்.
கடகம் சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்:
ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயில்களில் வழிபாடு செய்ய வேண்டும்.