Home » செய்திகள் » மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் – அமைக்கிறது திமுக அறக்கட்டளை !

மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் – அமைக்கிறது திமுக அறக்கட்டளை !

மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் - அமைக்கிறது திமுக அறக்கட்டளை !

ECR சாலையில் மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம், திமுக அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. kalaignar-international-convention-centre near Mahabalipuram

கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் அமைக்க திமுக சார்பில் தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கமானது திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 5.4 ஹெக்டேர் நிலத்தில் 2.54 ஏக்கரில் வணிக ரீதியிலான கட்டடமாக அமைகிறது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வடகடம்பாடி, பெருமாளேரி கிராமத்தில் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் 2.54 ஹெக்டர் பரப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் திமுக அறக்கட்டளை சார்பில் கலை, இலக்கியம், கலாசார நிகழ்வுகள் மற்றும் திமுக அரசியல் நிகழ்வுகளும் மையத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top