கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024. தமிழ்நாடு அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024
அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கலைஞர் கனவு இல்லம் திட்டம் :
கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இதனையடுத்து தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு புதிதாக ஆர்.சி.சி கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது.
அந்த வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டன.
அதன் பிறகு இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பி.பொன்னையா இன்று வெளியிட்டு பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த 2024-25 ஆம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையடுத்து இத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும் என்றும்,
நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி – ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !
இதில் 300 சதுரடி ஆர்.சி.சி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாகவும் பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டும் பொது ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் அமைக்க கூடாது.மேலும் ஒரு கட்டுவதற்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் வரும் படி திட்டமிட வேண்டும்.
அத்துடன் இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகளை கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு மூலம் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த கண்காணிப்பு குழுவானது அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்த பின்னர் தகுதிகளின் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தால் அவர்களை சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் பின்னர் வழிகாட்டுதல்கள் அடிப்படையில், வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொடர்பான விவரங்கள் அனைத்தும் வட்டம் மற்றும் கிராம அடிப்படையில் தயாரித்து ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேணடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.