
Breaking News: கலைஞரின் 6வது நினைவு நாள்: மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 6-வது நினைவு நாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி அன்று தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். kalaignar karunanidhi 6th memorial day
அதில் கூறியிருப்பதாவது, ” அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தனக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக் கொண்ட தலைவர் தான் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.
இதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி தலைவர் கலைஞரின் 6வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. dmk party
கலைஞரின் 6வது நினைவு நாள்
அதன்படி சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து ஆரம்பித்து இந்த அமைதி பேரணி காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வரை சென்று கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர். tamilnadu cm stalin
Also Read: மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய் – முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிக்கை!
மேலும் இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைமைக் கழகச் செயலாளர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. kalaignar karunanidhi
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை
தமிழகத்தில் இது தான் முதல் முறை