துணை முதலமைச்சர் உதயநிதி கலைஞர் மகளிர் உரிமை தொகை 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000 கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவை கூட்டமானது ஆளுநர் உரையோடு தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று கூட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து துணை முதலமைச்சர் பேசியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!
அதாவது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பெரும்பலான பெண்கள் விண்ணப்பித்த போதிலும் அதில் குறைந்த பட்ச பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ” தமிழகம் முழுவதும் மொத்தம் ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?
இதில் முதலில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பெண்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பிறகு, 9 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், மகளிர் உரிமைத் தொகைக்காக புதியதாக விண்ணப்பித்த பெண்களுக்கு மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.01.2025)! மாவட்ட வாரியாக Power Cut News!
திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!