Home » செய்திகள் » கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு –  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு –  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு -  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Breaking News: கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு: திமுகவின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் ஐயாவை பெருமை சேர்க்கும் விதமாக திமுகவினர்  ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனை தொடர்ந்து கலைஞர் முகம் பதித்த நாணயங்களை தயார் செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இருந்து வந்த நிலையில், தற்போது இந்த விஷயம் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை!

அதாவது, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிடுகிறது. மேலும் அந்த ரூ.100 சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு கீழ் அவரது கையொப்பமும் பொறிக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் இடம்பெற்றிருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top