தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த மு கருணாநிதி அவர்களின் நினைவிடத்தை கடந்த ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதில் கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள் ஆடைகள் என அனைத்தையும் அருங்காட்சியகம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சினிமா பிரபலங்கள் முதல் தலைவர்கள் அவரை அதனை சுற்றி பார்த்து வருகின்றனர். பிரபலங்கள் போல் மக்களும் இந்த “கலைஞர் உலகம்” என்ற அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு https://www.kalaignarulagam.org/ என்ற இணைய தளத்தை உருவகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த வெப்சைட்டுக்குள் சென்று பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். குறிப்பாக இது முற்றிலும் இலவசமாக அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் ஏதும் தேவை இல்லை. அதன்படி பொதுமக்கள் நாளை முதல் “கலைஞர் உலகம்” அருங்காட்சியகத்தை கண்டு களிக்கலாம். தினசரி காலை 9 மணி முதல் மாலை இரவு 8 மணி வரை மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு மொபைலில் 5 அனுமதி சீட்டுகளுக்கு பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.