அடேங்கப்பா.., களவாணி படத்தில்  விமலுக்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது? - சும்மா தேவதை போல இருக்காரே?அடேங்கப்பா.., களவாணி படத்தில்  விமலுக்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது? - சும்மா தேவதை போல இருக்காரே?

களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கச்சியாக நடித்த மனிஷா பிரியதர்ஷினியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விமல். திரைத்துறையில் நுழைந்து சின்ன சின்ன சைடு கேரக்டரில் நடித்து தற்போது முக்கிய நடிகராக இருந்து வருகிறார். அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது களவாணி தான். எதார்த்தமான நடிப்பில் உருவான இப்படத்தில் அவருடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ஓவியா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் விமலுக்கு தங்கச்சியாக நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி. இதனை தொடர்ந்து ஒரு சில சீரியல்களிலும் நடித்திருந்தார்.

மேலும் அவர் நடிப்பை தாண்டி படிப்பிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. தனது தாயின் கனவை நிறைவேற்ற அவர் கலெக்டராக சிவிஸ் சர்வீஸ் தேர்வு பயிற்சியில் இருந்து வருகிறார். ஆனால் அதற்கான பயிற்சி கட்டணம் கட்ட முடியாமலும், புத்தகங்கள் வாங்க முடியாமலும் தவித்து வந்த இவருக்கு, நடிகர் ஜெய் தான் உதவியதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் களவாணி படத்தில் தங்கையாக நடித்தவரா இப்படி தேவதை போல் மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் ஏப்.15ல் விசாரணை செய்ய முடிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *