கலியுகத்தை கணித்த வேதவியாசர். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் நாம் தற்போது வாழும் இந்த கலியுகம் பற்றிய சில செய்திகள் இடம் பெற்றுள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வேதவியாசர் இந்த நூலை எழுதினார். அதில் தற்போது கலியுகத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் அப்படியே பொருந்தி போகின்றன. அப்படி என்ன அந்த நூலில் இருக்கிறது? என்பவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
கலியுகத்தை கணித்த வேதவியாசர்
கலியுகத்தின் தாக்கத்தால் மனிதரிடையே அறநெறி, உண்மை, பொறுமை, உடல்வலிமை, ஆயுட்காலம், நினைவாற்றல் போன்றவை குறைந்து கொண்டே வரும்.
கலியுகத்தில் பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். அவனது நற்பண்புகள் அல்ல
சட்டமும், நீதியும் கூட ஒருவரின் அதிகாரத்தின் அடிப்படையில் செயல்படும்.
வெற்றி என்பது வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்து இருக்கும்.
வெறும் வாய் வார்த்தைகளால் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவர். ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்தே மக்கள் அவரை பண்டிதராக ஏற்று கொள்வர்.
கலியுகத்தில் இருக்கும் சிலர் பொருட்செல்வம் இல்லாதவனை தீண்டத்தகாதவனாக ஒதுக்குவர். அலங்காரம் செய்வதாலும், குளிப்பதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமானவனாக ஏற்றுக்கொள்ளப்படுவான்.
வயிற்று பசியை போக்குவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும்.[பாகவத புராணம் 12.2.6]
உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல் வாதிகள் நிறைந்து விடுவர். தன் சமூகத்திடையே தன்னை பலமானவனாக காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தை பெறுவான்.
மதுரை சித்திரை திருவிழா 2024 திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்கும் வரை முழு விபரம் உள்ளே !
ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்க ளிடம் வசூலிக்கப்படும்.மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர் போன்றவற்றை உண்ண தொடங்குவர்.கடுமையான பருவ நிலை மாற்றம் ஏற்படும்.இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவர்.
பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பர். இதனால் வயிற்று பசி, தாகம் நோய், பயம் போன்ற துன்பங்கள் உண்டாகும்.
கொடூர கலியுகத்தின் உச்சியில் மனிதனின் ஆயுட்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்க ளிடம் வசூலிக்கப்படும்.மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர் போன்றவற்றை உண்ண தொடங்குவர்.கடுமையான பருவ நிலை மாற்றம் ஏற்படும்.இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவர்.
செல்வத்திற்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்றவற்றை வளர்த்து கொள்வான்.நட்பை போற்றாமல் தன் சுற்றத்தார், உறவினர்களை கூட கொல்ல துணிவான்.
தானதர்மங்கள் என்பது வெறும் பகட்டுக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே இருக்கும்.
நன்றிக்கடன் மறக்கப்படும். தனக்கு உழைத்து தந்த தொழிலாளியை முதலாளி கைவிடுவான்.பால் கொடுத்த பசு கொல்லப்படும்.
நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர். வேதங்கள் கயவர்களால் பொய்யான முறையில் மொழிபெயர்க்கப்படும்.அரசியல்வாதிகள் மக்களை மெல்ல மெல்ல கொடுமை படுத்துவர் இவ்வாறு அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
கலியுகம் துன்பங்கள் நிறைந்து தான். ஆனாலும் கலியுகத்தில் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. இந்த துன்பங்களில் இருந்து நம்மை காத்து கொள்ள இறைபக்தி மட்டுமே துணை புரியும். மனதை உறுதியாக வைத்து கொள்ள தியானமும், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள யோகாவும், செயலை தூய்மையாக வைத்து கொள்ள சுயநலமற்ற சேவைகளையும் நாம் கடைபிடிக்கவேண்டும். கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என்று கூறப்பட்டுள்ளது.அதுவரை கடவுள் சிந்தனையோடு நாம் இருக்க வேண்டும்.