Home » சினிமா » பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 AD”.., எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியை பிளாக் பண்ண படக்குழு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 AD”.., எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியை பிளாக் பண்ண படக்குழு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பிரபாஸ் நடிக்கும் "கல்கி 2898 AD".., எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியை பிளாக் பண்ண படக்குழு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பாகுபலி படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ். ஆனால் இந்த படத்திற்கு பிறகு வெளியான எந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் , சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சலார். இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

கல்கி 2898 AD

தற்போது அவரிடம் மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்து வருகிறது. அதில் ஒன்று தான்  ‘கல்கி 2898 AD’ . இப்படத்தை நாக் அஷ்வின் இயக்க, தீபிகா படுகோனே பிரபாஸ்-க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவின் முதல் வாரிசான உலகநாயகன் கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் இப்படத்தின்  முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் வருகிற மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். 

கல்கி 2898 AD

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top