Breaking news விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராயம்1 விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஆங்காங்கே கண்டனம் எழுந்து கொண்டிருக்கிறது. மேலும் அடுத்தடுத்து உயிர்கள் பிரிந்து வரும் நிலையில் முக ஸ்டாலின் கூடுதல் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” விஷசாராயம் குடித்து மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் மருந்து கடைகளிலும் எத்தனால் உள்ள சானிடைசர், ஸ்பிரிட், ஹாண்ட் வாஷ் மற்றும் ஆல்கஹால் உள்ளிட்ட மூலப் பொருட்களாக இருந்து வரும் மருந்து பொருட்கள், சுத்தம் செய்யும் கிருமி நாசினிகளை விதிமுறைகளின்படி விற்பனை செய்ய தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
விஷச்சாராய உயிரிழப்பு எதிரொலி: 37 ஆயிரம் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
அதுமட்டுமின்றி சானிடைசர் அளவுக்கு அதிகமாக வாங்கும் நபர்களின் அடையாள அட்டையை கடை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. tamilnadu news – kallakurichi issue – Ethanol 2024 news – death news – fake liquor – fake alcohol
விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… யாருக்கெல்லாம் தெரியுமா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎kallakurichi alcohol death issue