தமிழகத்தில் விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்1 விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நேற்று 35 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 47 ஆக உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. மேலும் மருத்துவமனையில் சிலர் கவலைகிடத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டசபை பொதுக் கூட்டத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சில வார்த்தைகளை முன் வைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நிதி நிவாரணம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
விஷச்சாராய விவகாரத்தில் கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… யாருக்கெல்லாம் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி செலவுகளை அரசாங்கமே ஏற்கும். இதில் உயர் கல்வி கட்டணம் வரையும், விடுதி கட்டணமும் அடங்கும். மேலும் அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுமட்டுமின்றி அப்பா அம்மாவை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் வங்கி கணக்கில் 5 லட்சம் நிலையான வைப்பு தொகை வரவு வைக்கப்படும். அதே போல் பெற்றோர் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதி நிவாரணம் வழங்கப்படும். குறிப்பாக அரசு கொண்டு அனைத்து நல்ல திட்டங்களிலும் அக்குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுமட்டுமின்றி அரசு மற்றும் அரசு சார்ந்த விடுதிகளில் அக்குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப சேர்க்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். kallakurichi issue latest update – mk stalin latest news – tamilnadu government
கள்ளச்சாராயம் விவகாரம்: தலைவர் விஜய்யிடம் இருந்து கழக நிர்வாகிகளுக்கு பறந்த கோரிக்கை!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎fake alcohol issue 2024