கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் 1விவகாரம் தற்போது உலகத்தில் பூதாகரமாக வெடித்து உள்ளது என்று நாம் அனைவரும் அறிவோம். இந்த விஷ சாராயம் சம்பவத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 90க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கள்ளக்குறிச்சியில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என்பதால் அங்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎fake liquor drinking issue