கள்ளழகர் நாளை புறப்பாடு 2024 : மதுரை மண்ணின் உலக புகழ் பெற்ற திருவிழாவான மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து மாலை நேரத்தில் மீனாட்சி அம்மன் தேர் மூலம் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் தன்னுடைய தங்கச்சியின் கல்யாணத்தை பார்ப்பதற்கு கள்ளழகர் நாளை கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து சுவாமி சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். இதனை தொடர்ந்து கல்யாணம் முடிந்த சேதியை கேட்டவுடன் கள்ளழகர் வரும் ஏப்ரல் 22-ம் தேதி மூன்று மாவடியில் எதிர்சேவை செய்ய இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை( ஏப்ரல் 23) அன்று தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கியிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள இருக்கிறார். இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் திரளும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சல் வைபவம் நடைபெறும் நிலையில், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சுவாமி தங்குகிறார். அடுத்த நாள் (ஏப்ரல் 24) வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் மோட்சம் அளித்த பிறகு, ஏப்ரல் 25-ல் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளிய பின்னர் ஏப்ரல் 26-ல் கள்ளழகர் மதுரையில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டு 27-ஆம் தேதி இருப்பிடம் சேருகிறார். இறுதியாக 28-ல் உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.