தமிழ்நாட்டில் இருக்கும் மலை பிரதேசங்களின் பிரபலம் வாய்ந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருப்பது ஊட்டி. இங்கு குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஜாலியாக இருப்பதற்கு ஏற்ற இடமாக இருக்கின்றது. இத்தகைய குளிர் அதிகம் நிறைந்த ஊட்டியில் சுற்றுலா சென்று பாக்கக்கூடிய இடம் பல இருக்கின்றது. கல்லட்டி சாலை திகில் பயணம் ! ஆனால் வெளியூர் காரர்களுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு நாம் முதுமலை செல்லும் வழியில் இருக்கும் கல்லடி சாலை மிகவும் பயங்கரம் வாய்ந்த சாலையாக இருக்கின்றது. காரணம் இங்கு நடந்த பல விபத்துகள். இந்த சாலையை பேய் சாலை , கொலைகார சாலை , எமன் சாலை என்று பல பெயர்களில் அழைக்கின்றார்கள். இந்த கல்லட்டி சாலையில் விபத்துகள் நடப்பதற்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
கல்லட்டி சாலை திகில் பயணம்
ஊட்டியின் சிறப்புகள் :
ஊட்டி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,200அடி உயரத்தில் அமைந்து இருக்கின்றது. கோடை காலங்களில் அதிக பயணிகள் இங்கிருக்கும் இதமான சூழலை ரசிக்க ஊட்டி வருவது உண்டு. இங்கு சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை காண பல சுற்றுலா தலங்கள் இருக்கின்றது. அவைகளில் சில ,
1. ஊட்டி ஏரி
2. ஊட்டி தாவரவியல் பூங்கா
3. தோட்ட பெட்டா சிகரம்
4. அருவி
5. காமராஜ் சாகர் அணை
6. முதுமலை தேசிய பூங்கா
7. ரோஜா பூங்கா
8. பொம்மை ரயில்
9. பைக்காரா
10. தேயிலை தோட்டம் என பல சுற்றுலா செல்ல இடங்கள் இருக்கின்றது.
முதுமலை தேசிய பூங்கா :
ஊட்டியின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது முதுமலை தேசிய பூங்கா. இவ்விடம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் 1940ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு வனவிலங்கு சரணாலயம் ஒன்றும் இருக்கின்றது. இங்கு யானைகள் பராமரிப்பு செய்யப்பட்டு வருகின்றது. முதுமலை தேசிய பூங்காவிற்கு ரூ. 30 கட்டணம் செலுத்தி காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மதியம் 3 மணியில் இருந்து 6 மணி வரையிலும் இங்கு செல்லலாம். கட்டணம் செலுத்தி இங்கிருக்கும் யானையில் சவாரி செய்யலாம்.
முதுமலை செல்லும் வழி :
முதுமலை தேசிய பூங்கா மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்வதற்கு முதல் பாதையானது ஊட்டியில் இருந்து கூடலூர் வழியில் 72கிலோ மீட்டர் தூரத்தில் முதுமலை பகுதியை அடைய முடியும். இரண்டாவது பாதையானது கல்லட்டி வழியில் 32 கிலோ மீட்டர் தூரத்தில் முதுமலை பகுதியை சீக்கிரமாக அடைந்து விடலாம். கல்லட்டி சாலையில் பெரும்பாலான பயணிகள் பயணிக்க அனுமதி இல்லை. வனத்துறையினர் அனுமதிக்கும் வாகனங்கள் மட்டுமே கல்லட்டி சாலையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்க்கு காரணம் என்ன ?
உங்கள் I’D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் கார்டு இருக்கா ! பிளாக் பண்ண வழி இதோ !
கல்லட்டி சாலையில் யார் செல்லலாம் :
1. அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுக்கு மட்டுமே இந்த சாலையில் பயணிக்கு அனுமதி.
2. ஊட்டி லைசன்ஸ் வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
3. TN 43 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
சாலை எப்படி இருக்கும் :
ஊட்டியில் இருந்து முதுமலை செல்வதற்க்கு கல்லட்டி சாலையில் இரண்டு சோதனையை சாவடியை கடந்து செல்ல வேண்டும். பின்னர் 36 கொண்டை ஊசி வளைவுகளை 11 கிலோ மீட்டர் சாலைகள் கொண்டு உள்ளது.
பிசாசு சாலை :
இந்த கல்லட்டி சாலை வழியாக செல்லும் பல வாகனங்கள் விபத்துகளில் சிக்கி உயிர் இறந்துள்ளனர். இரு சக்கர வாகனம் , கார் , பேருந்து மற்றும் லாரி போன்ற அணைந்து வாகனங்களும் விபத்துகளில் சிக்கி விடுகின்றது. இந்த சாலையில் தினமும் 2 முதல் 3 விபத்துகள் நடக்கின்றது. சாலையின் ஓரத்தில் பெரும்பாலும் தடுப்புகள் இருப்பதில்லை. சிறுத்தை , செந்நாய் , புலி , யானை , கரடிகள் , காட்டு எருமைகள் போன்ற விலங்குகள் சாலையில் பயணிக்கின்றது. மழை நேரத்தில் இந்த சாலையில் எதிரில் எந்த வாகனம் வருகின்றது என்பது கூட தெரியாத வண்ணமாய் இருக்கின்றது.
எப்படி பயணிக்க வேண்டும் :
கல்லட்டி சாலையில் மலையில் ஏறும் போதும் இறங்கும் போது அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருக்கும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதல் கியரில் வாகனம் இயக்க வேண்டும் என்றால் முதல் கியர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டாவது கியர் பயன்படுத்த வேண்டும் என்று பலகையில் எழுதி இருந்தால் மட்டுமே இரண்டாவது கியர் பயன்படுத்த வேண்டும்.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
விபத்து நடப்பதற்கான காரணங்கள் :
1. அதி வேகத்தில் வரும் வாகனங்கள்
2. ஐந்தாவது கியரில் வரும் வாகனங்கள்
3. வாகனத்தில் பிரேக் பிடிக்காமல் போவது
4. குடி போதையில் வாகனம் ஓட்டுவது
5. வாகனங்களை முந்தி செல்வது
6. ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது
7. வாகனம் ஓட்டும் போது கவனம் சிதறுவது
தடுப்பதற்கான வழிமுறைகள் :
ஆபத்துகள் நிறைந்து இருக்கின்றது என்று அறிந்த பின் இந்த சாலையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கல்லட்டி சாலையில் பயணிக்க அனுபவம் இருக்கும் ஓட்டுநர்கள் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. மசினகுடி பகுதியை அடைவதற்கு கூடலூர் பாதையை பயன்படுத்தும் போது நேரம் அதிகம் என்றாலும் ஆபத்துக்கள் இல்லை என்பதால் பெரும்பாலும் கூடலூர் வழி மசினகுடி பாதையை பயன்படுத்துவது நல்லது.
அமானுச சக்தி காரணமா :
கல்லட்டி சாலையில் தினமும் இரண்டு முதல் மூன்று விபத்துக்கள் நடந்து விடுகின்றது. இதற்க்கு விபத்து நடந்த பகுதிகளில் இருக்கும் பேய் மற்றும் பிசாசுகள் தான் காரணம் என்று பேசப்பட்டாலும் விபத்துகள் நடப்பதற்கு பெரும்பாலும் மனிதர்கள் தான் காரணமாக இருக்கின்றனர்.
மக்களின் கோரிக்கை :
சுற்றுலா வரும் பெரும்பாலான மனிதர்கள் கூகுள் மேப் பயன்படுத்தியே வாகனங்களை இயக்கி வருகின்றனர். மசினகுடி செல்வதற்கு இரண்டு பாதைகள் இருந்தாலும் கல்லட்டி சாலை வழியாக செல்லும் போது நேரம் மிச்சம் ஆகிறது. கல்லட்டி சாலையின் ஆபத்தினை அறிந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்துவது இல்லை. ஆனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த சாலையின் ஆபத்து தெரியாமல் கூகுள் மேப் மூலம் பயணித்து விபத்துகளில் சிக்கி விடுகின்றனர். எனவே கூகுள் மேப்பில் இந்த கல்லட்டி சாலையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
கல்லட்டி சாலை திகில் பயணம்
ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியில் மசினகுடி செல்லும் பாதை தூரம் குறைவு தான். மிகவும் அழகிய சாலையாகவும் இருக்கின்றது. ஆனால் ஆபத்தினை உணராமல் அழகை மட்டும் ரசிக்க வேண்டும் என்று இந்த சாலையில் பயணித்தால் உயிர் பிழைப்பது கடினம் தான்.