கள்ளழகர் திருவிழாவில் எல்லாரும் தண்ணீர் பீய்ச்சலாம்? – மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை பக்தர்கள் நேர்த்திக் கடனாக செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். எனவே தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் தண்ணீர் பீய்ச்ச பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த வருடம் அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்ச முடியும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் மாவட்ட கலெக்டர் உத்தரவால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இதுவரை 7 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதனால் நம்முடைய பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு, பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால் மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் எந்த காரணத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தார் என்றும், இது குறித்து ட்ட அலுவலர் அல்லது கோவில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா? என்று விளக்கம் கொடுக்க வேண்டும்.எனவே இந்த வழக்கை வழக்கை 22-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.