Home » சினிமா » ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம் – மொத்தம் இத்தனை கோடி வசூலா?

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம் – மொத்தம் இத்தனை கோடி வசூலா?

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம் - மொத்தம் இத்தனை கோடி வசூலா?

Kollywood update: ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம்: உலகநாயகன்1 நடிப்பில் உருவாகி ரசிகர்களின் பெரிய  எதிர்பார்ப்பில் இருந்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. கிட்டத்தட்ட 5 ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் கடந்த மாதம் துவங்கியது.

குறிப்பாக USA உள்ளிட்ட பல இடங்களில் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: விக்ரமின் “தங்கலான்” ட்ரைலர் வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதாவது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட  ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் ரூ. 70 லட்சத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக பட அதிக வசூலை ஈட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

  1. actor kamal haasan latest news ↩︎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top