தற்போது அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு கட்சி உறுப்பினர்களின் பெரும்பாண்மை ஆதரவை பெற்றுள்ளதால் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமெரிக்கா அதிபர் தேர்தல் :
இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
கமலா ஹாரிஸ் தேர்வு :
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான போதுமான ஆதரவைக் கட்சி நிர்வாகிகளிடம் தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
அந்த வகையில் ஆதரவைப் பெறுவதற்கான வாக்குப்பதிவு தொடங்கிய 2 வது நாளிலேயே கட்சி நிர்வாகிகளிடம் இருந்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். மேலும் 5 நாட்கள் நடக்கும் இந்த வாக்குப்பதிவில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வாக 2 ஆயிரத்து 370 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் அதற்கும் அதிகமான வாக்குகளைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளதாக அக்கட்சியின் தேசியக் குழு தலைவர் ஜேம் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் – 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் !
இதன் அடிப்படையில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள சிகாகோ மாநாட்டில் அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட உள்ளார்.
இது தொடர்பாகக் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குப் பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.