Home » சினிமா » காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்கில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ராகவா லாரன்ஸ். அவர் முதலில் நடனம் மூலமாக தான் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். இதையடுத்து நடிகராகவும், இயக்குனராகவும் தொடர்ந்து ஹிட் அடித்தது. அப்படி அவர் இயக்கிய படங்களில் நம் நினைவுக்கு முதலில் வரும் திரைப்படம் என்றால் அது, காஞ்சனா தான்.

ராஜ்கிரண் வைத்து கொடுத்த முனி படத்தில் ஆரம்பித்து காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதனால் அவர் இயக்கப் போகும் காஞ்சனா 4 எப்போது வெளியாகும் என்பது குறித்து கேள்வி தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இடம் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்-ல் இருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று அவரே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், காஞ்சனா 4 குறித்து தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, காஞ்சனா 4 படத்தில்  நடிகை பூஜா ஹெக்டே தான் பேயாக நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது,  பூஜா ஹெக்டே தளபதி 69, ரெட்ரோ ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!

எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!

நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!

மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top