Home » செய்திகள் » மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் – கங்கனா ரனாவத் நிபந்தனை!!

மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் – கங்கனா ரனாவத் நிபந்தனை!!

மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் - கங்கனா ரனாவத் நிபந்தனை!!

Breaking News: மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்1 இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 74,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கங்கனா ரனாவத் தற்போது தொகுதி மக்களுக்கு ஒரு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

அதாவது அண்மையில் மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது கங்கனா பேசியதாவது, ” நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அந்த குறைகளை தீர்க்க முயற்சிப்பேன்.

மேலும் என்னுடைய தொகுதி மக்களுக்காக நான் எப்போதும் பாடுபடுவேன். அதுமட்டுமின்றி என்னுடைய ஒவ்வொரு நேரத்தையும் என் மக்களுக்காகவும், இந்த இடத்தில அவர்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

Also Read: ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம் – மொத்தம் இத்தனை கோடி வசூலா?

எனவே என் தொகுதி மக்கள் என்னை காண வரும் பொழுது கண்டிப்பாக கையில் ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும்.

அப்போது தான் குறைகள் விரைவில் தீரும் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

  1. parliamentary election news update ↩︎

indian news – election news – lok sabha election – indian election update

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top