சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் தான் அனிமல். இதில் பல ஆபாச வார்த்தைகள், காட்சிகள் இடம்பெற்றிந்தாலும் கூட இப்படம் கிட்டத்தட்ட ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும் சினிமா பிரபலங்கள் கூட இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அண்மையில் நடிகை கங்கனா ரனாவத்தும் ‘பெண்களின் கண்ணியத்தை போக்கும் வகையில் அண்மையில் வெளியான படங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து கங்கனா குறித்து பேசிய அனிமல் பட இயக்குனர், அவர் சிறந்த நடிகை, அவரை எப்படியாவது என் படத்தில் நடிக்க வைப்பேன் என்று கூறிய நிலையில், அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், “என்னை உங்கள் படங்களில் நடிக்க வைக்க தயவு செய்து முயற்சி செய்யாதீர்கள். அப்படி என்னை நடிக்க வைத்தால் ஆணாதிக்கவாதியாக நடிக்கும் உங்கள் கதாபாத்திரங்கள் பெண்களை போற்றுபவர்களாக மாறிவிடுவார்கள். அது உங்கள் படத்திற்குத்தான் நல்லது அல்ல” எனத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.