சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ் - இரண்டு பார்ட்டாக வெளியாகும் "கங்குவா" திரைப்படம்!!சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ் - இரண்டு பார்ட்டாக வெளியாகும் "கங்குவா" திரைப்படம்!!

Kollywood King சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா1. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார்.

மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர்  உள்ளிட்டவை வெளியான நிலையில் மக்களிடம் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Also Read: பிரபல பின்னணி பாடகி கணவர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

அதாவது சூர்யா நடித்துள்ள “கங்குவா” படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். முதல் பார்ட் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்றும், செகண்ட் பார்ட் வருகிற 2026ம் ஆண்டு வெளியாகும் என தெரிவித்துள்ளார். 

  1. actor suriya latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *