
“கங்குவா” திரைப்படம்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் “கங்குவா” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர், கிளிம்ஸ் வீடியோ போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 10 மொழிகளுக்கு மேல் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவருடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிக்கும் “கங்குவா” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கண்டிப்பாக இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என கோலிவுட்டில் பரவலாக பேசி வருகின்றனர். தற்போது இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.