இந்த வருடம் மார்ச் 29ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். எனவே கன்னி ராசிக்கு 7-ம் இடத்தில் கண்டகச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். மேலும் கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கன்னி ராசி சனி பெயர்ச்சி 2025 பலன்கள்:
கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். 7-ல் சனி இருந்தால் ஆரோக்கியக் குறைவு, விபத்து போன்றவை நடக்க கூடும்.
சகோதர சகோதரிகளால் கடன் பிரச்சனைகள் ஏற்படும். தொழில் ரீதியாக குடும்பத்தை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
விலையுயர்ந்த பொருட்கள், நகைகள், சொத்து ஆவணங்கள் போன்றவைகளில் அதிக கவனம் காட்ட வேண்டும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு பெருகும்.
அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலும் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவீர்கள்.
புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். உங்களுக்கான சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் மேலோங்கும். அரசியலில் புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் செய்வதில் யோசித்து செயல்பட வேண்டும்.
கன்னி சனி பெயர்ச்சி 2025 பரிகாரம்:
கன்னி ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சி காலத்தில் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும்.
அட்சய திருதியை 2025 தங்கத்திற்கு மாற்று தேர்வுகள் ! பொன் வேண்டாம் மண் போதும் !
ஆன்மிக செய்திகள் || முருகனின் வித்யாசமான கோலங்கள் என்ன என்று அறியலாம்!