
தமிழ் நாட்டில் இந்த பகுதியில் நாளை (நவம்பர் 2) மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு தடையில்லா மின்சாரத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் ஏற்படும் மின்கசிவு காரணமாக மின்சாரம் தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாக புகார்கள் எழுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் தமிழக அரசு சரி செய்து வருகிறது.
மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க – நாளை (நவம்பர் 2) இந்த பகுதியில் மின்தடை!
மேலும் மாதாந்திர பணிகள் நடைபெறும் போது வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை நவம்பர் 2ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!
அதன்படி, வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, செங்கவிளை, சூரியகோடு, உண்ணாமலைக்கடை, கருங்கல், ஊரம்பு, சுழல், கோழிவிளை, மாங்காடு, வாவரை, கீழ்குளம், கல்லுக்கூட்டம், நம்போலி, தேரிவிளை, கண்ணனும், கூத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், கிள்ளியூர், காப்பியரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்