பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தியானமானது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். இதனை தொடர்ந்து இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை அவர் விவேகானந்தா தியான மண்டபத்தில் தியானத்தை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் தேர்தல் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதற்கு காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவதுடன், தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள், மோடியின் தியானத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

IND vs PAK T20 World Cup 2024: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்? Match நடைபெறுமா?

எதிர்க்கட்சிகளின் புகார் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர், பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி தியானத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்.
அத்துடன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு 3 நாட்கள் மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *