
கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி: தமிழகத்தில் உள்ள கடலோர பகுதியில் இருக்கும் மாவட்டங்களுக்கு நேற்று முன் தினம் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது கடல் அலைகள் சீற்றத்துடன் இருப்பதால் கல்லக்கடல் என்னும் நிகழ்வு கடந்த இரண்டு நாட்களுக்கு ஏற்படும் என்று தெரிவித்தது.இதனால் கடுமையான கடல் சீற்றம் ஏற்படும் என்று எச்சரித்தது. எனவே சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரிக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த 12 மாணவர்கள் காவல்துறை எச்சரிக்கையை மீறி கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே இருக்கும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் குளித்தபோது 6 பேரை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் 5 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஆனால் ஒரு மாணவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மூன்று பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 2 நாட்களில் 8 பேர் கடல் அலையில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி