மதுரை – திருமங்கலம்: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி வழி சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. சமீபத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் இல்லாமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது அதை தளர்த்தி உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் சுங்க வரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்தது.
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் போராட்டம்
இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதை திரும்ப வாபஸ் பெற வேண்டும் என்று உள்ளூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது கப்பலூர் சுங்கச்சாவடியை முழுவதுமாக அகற்ற கோரி 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் முன்பாக அமர்ந்து திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் தான் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஆக்ராவில் பேருந்து லாரி மோதி கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு – காலையிலேயே இப்படி ஒரு சோகமா?
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த போராட்டத்தால் 50 சதவீத சுங்க வரி கட்டணம் வாபஸ் வாங்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
KKR அணியின் புதிய ஆலோசகர் யார் தெரியுமா?
விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு
ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின்
கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் – மத்திய அரசு அனுமதி !