
சிவக்குமார்
தென்னிந்திய தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார், இன்று நடந்த பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். அப்போது மேடையில் பேசிய போது என்னுடன் இரண்டு வயது குறைவாக இருந்தாலும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று கூறி பழ.கருப்பையாவின் காலில் விழுந்தார். இதனை தொடர்ந்து விழா முடிந்த பிறகு வெளியே சென்ற போது, ஒரு வயதான பெரியவர் ஒருவர் அவருக்கு சால்வை போர்த்தி விட முன் வந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அப்போது அந்த பெரியவர் கொடுத்த சால்வையை பார்த்து கடுப்பாகி அதை தூக்கி எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பொது இடத்தில் இப்படி எல்லாம் நடந்து கொள்ளலாம்? என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவர் இதற்கு முன்னர் மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், ஒரு இளைஞன் செல்பி எடுக்க முயன்ற போது கடுப்பாகி மொபைலை புடுங்கி தூக்கி எறிந்த வீடியோ வைரலானது. அதற்கும் பல எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.