காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்தது பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் தங்களின் ஆதரவினை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு தெரிவித்து உள்ளார். முழு அடைப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து காணலாம்.
பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு !
முழு அடைப்பு ஏன் :
காவேரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் , காவேரி மேலாண்மை வாரியம் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த ஆண்டு பருவமழையானது கர்நாடகாவில் சரியாக இல்லை. எனவே தண்ணீரை வழங்க கூடாது என்று கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கன்னட அமைப்பினரின் கோரிக்கைக்கு நடிகர் , நடிகைகள் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். அதன் படி பெங்களூருவில் 170 அமைப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் மூலம் காவேரி நீரினை திறப்பதற்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி கல்லூரிகள் விடுமுறை :
பெங்களூருவில் இருக்கும் அனைத்து பள்ளி , கல்லூரி அமைப்பினரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்த்திட இங்கே கிளிக் செய்யவும்
பொது சேவைகள் :
BMTC பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே இயக்கத்தில் இருக்கும். தனியார் பேருந்துகள் , ஓலா , உபர் , தனியார் கார் சேவைகள் போன்றவை முழு அடைப்பிற்கு ஆதரவு அளித்து இருப்பதால் இவைகள் பயன்பாட்டில் இருக்காது. மெட்ரோ ரயில் சேவை இயங்கும். ஆம்புலன்ஸ் , அத்தியாவசிய பொருட்கள் செல்லும் வாகனம் போன்றவைகள் இயங்கும். மெடிக்கல் , மருத்துவமனைகள் திறந்திருக்கும். பெரும்பாலான ஹோட்டல்கள் திறந்திருக்கும். அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயக்கத்தில் இருக்கும்.
தமிழக பேருந்துகள் :
தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் 400 தமிழக பேருந்துகள் இன்று நிறுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியே தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் தமிழகத்தின் எல்லை பகுதியான சூசூவாடி வரையில் மட்டுமே அனுமதி அளித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் பேருந்துகளும் சூசூவாடி வரையில் மட்டுமே செல்கின்றது.
தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !
கிரிக்கெட் வீரர் ஆதரவு :
தமிழகத்திற்கு காவேரி நீரினை திறந்து விடக்கூடாது என்று அரசியல் கட்சியினர் , அமைப்பினர் , நடிகர் மற்றும் நடிகைகள் தங்களின் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் தனது ஆதரவினை ‘ X ‘ தளத்தில் ஆதரவினை தெரிவித்து உள்ளார். காவேரி கர்நாடகாவில் உற்பத்தி ஆகின்றது. ஆனால் இந்த காவேரி தண்ணீரை கர்நாடக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வரு ஆண்டும் போராடும் நிலை இருக்கின்றது. காவேரி எப்போதும் நமக்கு தான் என்று தனது ஆதரவினை தெரிவித்து உள்ளார்.
பெங்களூருவில் முழு அடைப்பு
பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு சேவையை அதிகரித்து வருகின்றனர். தமிழகத்திற்கு காவேரி நீரினை வழங்கக்கூடாது என்று பல்வேறு அமைப்பினர் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. இதனால் தமிழக எல்லையிலும் காவல் துறையினர் பாதுகாப்பினை அதிகரித்து உள்ளனர்.