2 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த தொழிலதிபர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடகா மாநிலம் சிவமோக பகுதியை சேர்ந்த ரெஜிமோன் என்ற தொழிலதிபரிடம் 68 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த 68 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்பப்பெற தனது நண்பர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொழிலதிபர் ரெஜிமோன் வந்திருந்தார்.
2 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த தொழிலதிபர்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் அதிகாரிகள் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்திற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் ரெஜிமோன் சமர்ப்பித்தார் பிறகு ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.
இரண்டு கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த தொழிலதிபர் :
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தன்னிடம் பறிமுதல் செய்த 68 ஆயிரம் ரூபாயை வாங்குவதற்காக தனது நண்பர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தொழிலதிபர் ரெஜிமோன் கைகள், விரல் மற்றும் கழுத்தில் இரண்டே கால் கிலோ தங்க நகைகளை அணிந்து வந்திருந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
புதுச்சேரியில் உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு: இது தான் நடந்தது? தந்தை கண்ணீர் மல்க பேட்டி!!
தொழிலதிபர் ரெஜிமோன் கர்நாடகாவில் தேயிலை எஸ்டேட் வைத்திருப்பதாகவும் மற்றும் ஒரு அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகள் அணிவதில் அதிக விருப்பம் உண்டு அதனால் தான் எப்பொழுதும் தங்க நகைகளை அணிவதாகவும் அவர் கூறினார்.