கர்நாடகாவில் இயங்கி வரும் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இதே திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்முறைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கர்நாடகாவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தால் போக்குவரத்து கழகம் நஷ்டம் அடைந்து வருவதாக கூறப்பட்டது.
அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதனால் மீண்டும் பெண்களுக்கு பயண கட்டணம் வசூலிக்க போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை கேட்ட பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி கர்நாடக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கர்நாடகாவில் தற்போது இயங்கி வரும் வடமேற்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் (NWKRTC), பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (BMTC), மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) மற்றும் கல்யாண் கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் (KKRTC) உள்ளிட்ட 4 போக்குவரத்து கழகங்களிலும் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 5ஆம் தேதி முதல் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 15 சதவீதம் டிக்கெட் கட்டணம் அதிகரித்து நடைமுறைக்கு வர இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!
தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பவர் கட் ஏரியாக்களின் முழு தகவல்!
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!