பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை: பொதுவாக பெண்களின் பல போராட்டங்களில் ஒன்று தான் மாதவிடாய் காலம். அப்போது அவர்களின் வலி கொடுமையானதாக இருக்கும். அந்த சமயத்தில் அவ்வளவு வலிகளுடன் பணியில் வேலை பார்த்து வருகிறார்கள்.
பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை
எனவே அந்த நாட்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பளத்துடன் வேலை பார்த்து வரும் பெண்களுக்கு விடுமுறை வழங்கும் சட்டத்தை தற்போது கர்நாடக அரசு கொண்டு வர இருப்பதாக அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்.
Also Read: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஏற்கனவே மூன்று மாநிலங்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதே போல் நான்காவது மாநிலமாக கர்நாடகா இருக்கும். கேரளாவில் பெண் ஊழியர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை