கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி - பகீர் கிளப்பும் வீடியோ வைரல்!கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி - பகீர் கிளப்பும் வீடியோ வைரல்!

சமீபத்தில் கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி: தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இப்படி தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அந்த மூன்று மாநிலங்களுக்கும் வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மழை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதில் நனைந்து ஆட்டம் போடாத ஆட்களே இருக்க முடியாது. குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மொட்டை மாடிக்கு சென்று மயிலை போல ஆட்டம் போடுவார்கள்.

பெற்றோர்கள் மழையில் நனைய வேண்டாம் என்று சொல்லியும் மழலைகள் கேட்பதில்லை. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்தமார்க்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இத்தனை நாட்கள் அங்கு  வறட்சி நிலவி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் அங்கு வாழும் மக்கள் சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் இருக்கும் சிறுமி ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி  விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வீட்டின் கூரை மீது திடீரென மின்னல் ஒன்று தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து ஓடி விட்டார். இதில் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சிறுமிக்கு எந்த காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக குறித்து வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி மழை பெய்யும் போது வெட்டவெளியில், மரங்களின் கீழ் அல்லது மொட்டை மாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.  மேலும் தென் மாவட்டங்களில் விடமால் மழை பெய்து வருவதால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *