சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் - பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் - பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி. நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கட்சி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதிலளித்தது.

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வேண்டுமானால் தங்களுடன் கூட்டணிக்கு வருமாறுநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கர்நாடக கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த தேர்தல்களில் சீமான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வந்த விவசாயி சின்னம் வரும் மக்களவை தேர்தலில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளளது.

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு – அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !

இதனால் அந்த சின்னம் சீமானுக்கு கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் விவசாயி சின்னத்தை தருவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *