கரூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பிரிவு செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் தோகைமலை பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இங்கு காலியாக இருக்கும் காலிப்பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , விண்ணப்பிக்கும் முறை , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
கரூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! உடனே விண்ணப்பியுங்கள் !
அமைப்பின் பெயர் :
கரூர் மாவட்ட திட்டமிடல் பிரிவில் கீழ் இயங்கி வரும் தோகைமலை தொகுதி அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
வளரும் வட்டார திட்ட அலுவலர் ( Aspirational Block Fellow ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அமைப்பின் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
கரூர் மாவட்ட தோகைமலை தொகுதியில் ஒரு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடம் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் இயங்கி வரும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் வளர்ச்சி , சமூகவியல் , குழந்தை மேம்பாடு , சமூகப்பணி , பொது உடல்நலம் , குழந்தை வளர்ச்சி போன்ற பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கபப்டும்.
வயதுத்தகுதி :
18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 55,000 வழங்கப்படும். கரூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023.
ஊட்டியில் அரசு வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு !
முக்கிய தகுதிகள் :
1. ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
2. தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கக்காட்சி திறன் அவசியம்.
3. சமூக ஊடகங்களை பயன்படுத்த தெரிந்திருத்தல் வேண்டும்.
4. திட்ட மேலாண்மை திறன் அவசியம்.
5. தகவல் தொடர்பு திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
6. விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவம் :
ஏதேனும் ஒரு மேம்பாட்டு நிறுவனத்தில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
06.11.2023 முதல் 20.11.2023ம் தேதிக்குள் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட திட்ட அலுவலர் ,
திட்டமிட்டல் பிரிவு ,
எண் – 26 இணைப்புக் கட்டிடம் ,
ஆட்சியர் அலுவலகம் ,
கரூர் – 639007 ,
தமிழ்நாடு .
தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. மொபைல் எண்
3. பிறப்பு சான்றிதழ்
4. இருப்பிடச் சான்றிதழ்
5. ஆதார் கார்டு
6. கல்வி சான்றிதழ்
7. சாதி சான்றிதழ்
8. அனுபவ சான்றிதழ்
போன்றவைகளின் ஜெராக்ஸ் உடன் விண்ணப்படிவத்தினையும் இணைத்து சுயகையொப்பம் இட்டு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
முக்கிய குறிப்பு :
1. கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
2. மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் ஜெராக்ஸ் மட்டுமே விண்ணப்பபடிவத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரிஜினல் இணைக்க கூடாது.