அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்றைய சமயத்தில் ஜிபிஎஸ் கருவிகள் வாங்கியதில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது
அதுமட்டுமின்றி கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்படி இருக்கையில் .100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறி வழக்கில் தற்போது மேலும் இரண்டு பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளதாக தகவல் வே;வெளியாகியுள்ளது.
Also Read: Breaking News in Tamil நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2024: வந்தாச்சு இன்ஸ்டகிராம் வசதி – இனி எல்லா செய்திகளும் உடனுக்குடன்!!!
அதாவது நிலம் அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனு கடந்த 3 நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை