சென்னை ஐஐடி சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025 நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்நிகழ்வில் பங்கேற்போருக்காக இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Kashi Tamil Sangam Registration 2025
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025:
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை வரும் பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.
சென்னை ஐஐடி அறிவிப்பு:
அந்த வகையில் இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 24 வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முழக்கத்தை வலியுறுத்தவும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்களுக்கு இடையிலான கலாச்சார தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
இந்நிகழ்வில் பங்கேற்போருக்காக ஐந்து பிரிவுகளில் விண்ணப்பங்கள், http://kashitamil.iitm.ac.in. என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்நிகழ்வுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University – BHU) வரவேற்புக் கல்வி நிறுவனமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.