Breaking News: சட்டமன்ற தேர்தல் 2024: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மக்கள் அனைவரும் வருகிற 2026 ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாகவும், ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் 2024
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 90 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதே போல் 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி அம்மாநிலத்திற்கு தேர்தல் நடக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நடைபெற இருக்கும் தேர்தல் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான பணிகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாகவும், ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. election commission
Also Read: இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான் – காவல்துறை அதிரடி உத்தரவு!
அதன்படி, முதல் 24 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25ம் தேதியிலும், 3 ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1ம் தேதியிலும் தேர்தல் நடைபெறும். அதேபோல் ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1 ல் தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. assembly elections
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்